ராமநாதபுரத்திற்கு நிதி ஆயோக் ரூ.6 கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் வளரும் மாவட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள ராமநாதபுரம் வளர்ச்சி பணிகளில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டி தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த தால் நிதி ஆயோக் அமைப்பு ரூ.6 கோடி நிதியை வழங்கி உள்ளது.

Update: 2022-03-25 14:13 GMT
ராமநாதபுரம், 
மத்திய அரசின் வளரும் மாவட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள ராமநாதபுரம் வளர்ச்சி பணிகளில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டி தரவரிசையில் முன்னேற்றம் அடைந்த தால் நிதி ஆயோக் அமைப்பு ரூ.6 கோடி நிதியை வழங்கி உள்ளது.
நிதிச்சேவை
மத்திய அரசு இந்தியா முழுவதும் 117 மாவட்டங்களை தேர்வு செய்து வளரும் மாவட்டங்களாக அறிவித்து கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட கட்டமைப்புகளை பெருக்க உதவி வருகிறது. தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட் டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்று உள்ளன. 
அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நலவாழ்வு மற்றும் ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை மற்றும் நீர்வள ஆதாரங்கள், அனைவருக்கமான நிதிச்சேவைகள் மற்றும் திறன் வளர்ப்பு மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு ஆகியவற்றில் அளவீடுகள் நிர்ணயம் செய்து மாவட்டத்தின் முன்னேற்றம் நிதி ஆயோக் அமைப்பால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
இதன்படி ராமநாதபுரம் மாவட்டம் 2019 ஏப்ரல்-மே மற்றும் 2021 பிப்ரவரி-மார்ச் ஆகிய ஆண்டுகளில் வளர்ச்சி பணிகளில் குறிப்பிட்ட இலக்குகளை எட்டி மாவட்டங்களின் தர வரிசையில் முன்னிலை அடைந்ததற்காக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
விதை சுத்திகரிப்பு
இந்த நிதியின் மூலம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப ்பணிகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளன. அதன்படி வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை மூலம் ரூ.1 கோடியில் விதை சுத்திகரிப்பு நிலையம், ரூ.10.7 லட்சத்தில் குழித்தட்டு நாற்று விதையிடும் கருவி, ரூ.3 லட்சத்தில் தடுப்பூசி சேமிப்பு குளிர்சாதன பெட்டி, ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.1 கோடி செலவில் மழை நீர் சேகரிப்பு தொட்டி, மருத்துவத்துறை மூலம் ரூ.49 லட்சத்தில் நடமாடும் எக்ஸ்ரே நுண்கதிர் வாகனம், ரூ.1 கோடியே 92 லட்சத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.20 லட்சத்தில் டிஜிட்டல் ஹீமோ குளோபினோ மீட்டர், ரூ.36 லட்சத்தில் அல்ட்ரா சவுண்டு பரிசோதனை எந்திரம், ரூ.88.42 லட்சத்தில் கல்வித்துறை கணினி தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்பித்தல் ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த தகவலை கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்