பள்ளி மாணவி குத்தாட்டம் ஆடும் வீடியோ
விழுப்புரத்தில் பள்ளி மாணவி குத்தாட்டம் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர், விழுப்புரம் எம்.ஜி.சாலையில் குத்தாட்டம் ஆடும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதில் இளைஞர்கள் சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பதும், 2 பேர் நின்றுகொண்டு மேளம் அடிப்பதும், அதற்கு ஏற்றாற்போல் அந்த மாணவி பள்ளி சீருடையில் முதுகில் புத்தகப்பையையும் சுமந்து கொண்டபடி குத்தாட்டம் ஆடிக்கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் கூடிநின்று வேடிக்கை பார்த்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு பகுதியில் ஓடும் பஸ்சில் அரசு பள்ளி மாணவிகள் மது அருந்துவதுபோல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது விழுப்புரத்தில் பொதுமக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த சாலையில் பள்ளி மாணவி குத்தாட்டம் போடும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் விழுப்புரம் என்ற பெயர் இன்னும் மாறாத நிலையில் பள்ளி மாணவி நடுரோட்டில் குத்தாட்டம் ஆடிய நிகழ்வு பொதுமக்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.