உல்லாசம் அனுபவித்துவிட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுப்பு

உல்லாசம் அனுபவித்துவிட்டு என்ஜினீயரிங் கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுப்பு தொிவித்த ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

Update: 2022-03-25 13:21 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள ஆரியூரை சேர்ந்தவர் ஏழுமலை மகன் பிரபுதேவன் (வயது27). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்தவரான சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. சிவில் இறுதியாண்டு படித்து வரும் 23 வயதுடைய மாணவியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அப்போது பிரபுதேவன், அந்த மாணவியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தற்போது அம்மாணவி, பிரபுதேவனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அம்மாணவி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுதேவனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்