மாமியாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் உள்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-03-25 12:49 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மாமியாரை அரிவாளால் வெட்டிய மருமகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரிவாள் வெட்டு
தூத்துக்குடி, திருச்செந்தூர் ரோடு, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி (வயது 55). இவருடைய மருமகன் அதே பகுதியை சேர்ந்த சந்தனராஜ் மகன் கருப்பசாமி (24). நேற்று முன்தினம் இரவு, மாமியார், மருமகன் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, தனது தம்பி முனியசாமி (20) என்பவருடன் சேர்ந்து ஆரோக்கிய மேரியை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
கைது
இதில் பலத்த காயம் அடைந்த ஆரோக்கியமேரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமி, முனியசாமி ஆகிய 2 பேரையும் நேற்று கைது 

மேலும் செய்திகள்