அரசு வேலை வாங்கி தருவதாக பள்ளி ஆசிரியர்களிடம் ரூ 50 லட்சம் மோசடி

செங்கல்பட்டில் அரசு வேலை வாங்கி தருவதாக பள்ளி ஆசிரியர்களிடம் ரூ 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-25 12:49 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக...

செங்கல்பட்டு கைலாசநாதர் தெருவை சேர்ந்தவர் பொண்னுதுரை (வயது 54). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்தபோது கடந்த 14-9-2021 அன்று அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த செங்கல்பட்டை சேர்ந்த திருமுருகன், பாலமுருகன், செந்தில்குமார், சரவணன் ஆகியோரிடம் கணித ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் என அரசு ஆசிரியர் பணி வாங்கி தருவதாக ரூ.50 லட்சம் வரை வாங்கியுள்ளார். தற்போது பொன்னுதுரை எந்த பணியும் செய்யவில்லை.

பணத்தை வாங்கிய பொண்னுதுரையும் இவர்களுக்கு அரசு பணி வாங்கி தராமல் மோசடி செய்துள்ளார். நாளடைவில் பொண்னுதுரை செயல்களில் சந்தேகம் ஏற்படவே, பணத்தை கொடுத்தவர்கள் திரும்ப கேட்கும்போது ஏமாற்றி வந்துள்ளார்.

கைது

இதனால் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 4 பேரும் செங்கல்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பொண்னுதுரையை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

அங்கு நீதிபதி அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் பொண்னுதுரையை செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்