உடுமலை அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

உடுமலை அருகே அம்மா பட்டியில் 2வது நாளாக 7 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.

Update: 2022-03-25 12:25 GMT

தமிழகம் முழுவதிலும் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், கடைகள், வணிகவளாகங்களை அகற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அந்த வகையில் உடுமலையை அடுத்த ஜல்லிபட்டி கிராமத்துக்கு உட்பட்ட அம்மாபட்டி ஊராட்சியில் உள்ள துள்ளன்ஒட்டுக்குளம் அம்மாபட்டிகுளம் கரையில் ஆக்கிரமிப்புகள் இருப்பது அதிகாரிகள் ஆய்வின் போது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து  காலை உடுமலை தாசில்தார் கு.கணேசன் தலைமையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. அதற்கு முன்பாக பொதுமக்கள் வீடுகளின் மேற்கூரைகளை பத்திரமாக பிரித்து எடுத்துக்கொண்டனர்.அதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 7 வீட்டின் சுவர்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வருவாய்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

ஆக்கிரமிப்பு அகற்றுவதை முன்னிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜாகண்ணன், சிவக்குமார், ராஜேஸ்வரி மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.தளி பகுதியில் நேற்று அம்மாபட்டி பகுதியிலும் நேற்று முன்தினம் பள்ளபாளையம் பகுதியிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்