அண்ணா நகர் அடுக்குமாடி குடியிருப்பில் நேபாள நாட்டு காவலாளி மர்ம சாவு; கொலையா? போலீசார் விசாரணை

சென்னை அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-25 11:56 GMT
அண்ணாநகரில் உள்ள சாந்தி காலனி 11-வது பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு நேபாள நாட்டை சேர்ந்த பிரேம் (வயது 25), என்பவர் குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், அவர் தனது நண்பரான கணேஷ் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மாடிக்கு சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி அங்கு சென்று பார்த்தபோது, கழுத்து இறுக்கிய நிலையில் பிரேம் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவரை மீட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் பிரேம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரேமின் உடலை கைப்பற்றிய அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்