மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

Update: 2022-03-25 11:53 GMT
திருச்சி, மார்ச்.26-
மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள சுயஉதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள், தொகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. இதையொட்டி மேற்கண்ட சமுதாயஅமைப்புகளிடம் இருந்து தகுதியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிவாய்ந்த விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மாநகராட்சி மண்டலஅலுவலகங்களில் வருகிற 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்