சமூக ஊடகங்களில் சென்னை மாநகராட்சியை பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சமூக ஊடகங்களில் சென்னை மாநகராட்சியை பின் தொடர்வோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் வழங்க சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர்களில் கணக்குகள் தொடங்கப்பட்டு, தகவல் வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரையிலான 6 மாதங்களில் டுவிட்டர் மூலம் சென்னை மாநகராட்சிக்கு 651 புகார்களும், இன்ஸ்டாகிராம் மூலம் 90 புகார்களும், முகநூல் மூலம் 22 புகார்கள் என மொத்தம் 763 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 497 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னை மாநகராட்சியின் டுவிட்டர் பக்கத்தை 1 லட்சத்து 84 ஆயிரத்து 641 பேரும், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 39 ஆயிரத்து 301 பேரும், முகநூல் பக்கத்தை 56 ஆயிரத்து 466 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 80 ஆயிரத்து 408 பேர் பின் தொடர்கின்றனர். மேற்கண்ட தகவல் அனைத்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.