பணியை பாராட்டும் விதமாக போக்குவரத்து போலீஸ்காரருக்கு பரிசு வழங்கிய கலெக்டரின் மகள்

பணியை பாராட்டும் விதமாக போக்குவரத்து போலீஸ்காரருக்கு அன்பு பரிசாக டைரி ஒன்றை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரின் மகள் மோனோ மிர்தன்யா வழங்கினார்.

Update: 2022-03-25 08:53 GMT
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக இருந்து வருபவர் பாஸ்கர பாண்டியன். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு மோனோ மிர்தன்யா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர் போரூர் அடுத்த முகலிவாக்கம், லலிதாம்பாள் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில், தினமும் பள்ளிக்கு செல்லும் வழியான மணப்பாக்கம்-முகலிவாக்கம் சாலையில் போக்குவரத்து பணியை சரி செய்து வரும் போக்குவரத்து போலீஸ்காரர் சாலமன் சதீசை பார்த்து சிறுமி கை காட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலில் இருந்து பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்கு வழிவகை செய்வதை பாராட்டும் விதமாக, அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் சாலமன் சதீஷை பாராட்டும் விதமாக, அன்பு பரிசாக டைரி ஒன்றை சிறுமி மோனோ மிர்தன்யா வழங்கினார். அதனை பெற்று கொண்ட அவர், மிகுந்த புன்னகையுடன் அந்த சிறுமிக்கு தனது நன்றியை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்