காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது
சேரன்மாதேவி:
பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் சர்வதேச காசநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கை பத்தமடை வட்டார மருத்துவ அலுவலர் சரவணபிரகாஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங், நிர்வாக மேலாளர் மகேஷ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார். பத்தமடை சுகாதார ஆய்வாளர் முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஆண்டணி அருள்தாஸ், சுகாதார மேற்பார்வையாளர் செய்யது சுலைமான் ஆகியோர் காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்கள். பகுதி பொறுப்பாளர் முருகன் நன்றி கூறினார். கருத்தரங்கில் அனைவரும் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.