ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் ரெயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-03-24 22:52 GMT
சூரமங்கலம்:-
சேலம் ெரயில்வே ஏற்றுமதி-இறக்குமதி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் வெங்கடபதி தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் உதயகுமார், சங்க செயலாளர் கோவிந்தன் ஆகியோர் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தின் போது, கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், பி.எப்., இ.எஸ்.ஐ. உள்ளிட்ட சலுகைகளை அமல்படுத்த வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ரெயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்