கர்நாடக சட்டசபையில் ரூ.26,953 கோடி துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல்
கர்நாடக சட்டசபையில் ரூ.26,953 கோடி துணை பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது;
பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ரூ.26 ஆயிரத்து 953 கோடி மதிப்பீட்டில் துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு அவர் சபையை கேட்டு கொண்டார்.
அவர் பேசுகையில், "இந்த துணை பட்ஜெட்டின் அளவு சற்று அதிகமாக உள்ளது. திறமையான நிதி நிர்வாகம், வரி நிர்வாகம் சிறப்பான முறையில் கையாளப்பட்டுள்ளது. எங்கு வரி குறைகிறதோ அங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம். மாநில நிதி நிர்வாகம் மேற்கொள்ளும்போது, வரி வருவாயை முழுமையாக பெற வேண்டும். அந்த வருவாயில் நியாயமான முறையில் செலவு செய்ய வேண்டும். இதை நான் ஒப்புக்கொள்கிறேன். வருவாய் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு வங்கி கணக்குகள் இருப்பதால், அதில் சில நிதிகள் அப்படியே தேங்கி கிடக்கின்றன. அதன் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும். நிர்வாக சீர்திருத்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன். அதனால் இந்த துணை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்" என்றார்.