கர்நாடகத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 109 பேருக்கு கொரோனா

Update: 2022-03-24 22:48 GMT
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று புதிதாக 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 74 பேர் உள்பட 14 மாவட்டங்களில் பாதிப்பு பதிவானது. 15 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை. 39 லட்சத்து 45 ஆயிரத்து 79 பேர் இதுவரை பாதிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு நகர், தட்சிண கன்னடாவில் தலா ஒருவர் என மேலும் 2 பேர் இறந்தனர். 

இதுவரை 40 ஆயிரத்து 44 பேர் உயிரிழந்து உள்ளனர். 117 பேர் நேற்று குணம் அடைந்தனர். 39 லட்சத்து 3 ஆயிரத்து 201 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 1,792 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 0.34 சதவீதமாகவும், உயிரிழப்பு 1.83 சதவீதமாகவும் உள்ளது. மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்