தென்காசி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; பஞ்சாயத்து கவுன்சிலர் கைது

தென்காசி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பஞ்சாயத்து கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்;

Update: 2022-03-24 21:51 GMT
தென்காசி:
தென்காசி அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பஞ்சாயத்து கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
தென்காசி மாவட்டம் குற்றாலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மத்தளம்பாறையை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 46). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளராக இருந்து வருகிறார். மேலும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். 
இவர் 2-ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கவுன்சிலர் கைது 
இதுகுறித்த புகாரின் பேரில், தென்காசி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வீராச்சாமியை கைது செய்தனர். பின்னர் அவர் தென்காசி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஞ்சாயத்து கவுன்சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்