வீரகேரளம்புதூர் அருகே பஞ்சாயத்து தலைவி உள்பட 5 பேர் மீது தாக்குதல்; 6 பேர் கைது

பஞ்சாயத்து தலைவி உள்பட 5 பேர் மீது தாக்குதல் 6 பேர் கைது

Update: 2022-03-24 21:29 GMT
சுரண்டை:
வீரகேரளம்புதூர் தாலுகா ஊத்துமலை பாரதி நகரைச் சேர்ந்தவர் அய்யனார் மனைவி வளர்மதி (வயது 51). இவர் ஊத்துமலை பஞ்சாயத்து தலைவியாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் கொத்தாளமுத்து மகன் குமார் என்ற நிறைகுளத்தான் (35). இவர்களுக்கு இடையே பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் ஊத்துமலை அம்மன் கோவில் திருவிழாவுக்கு நிறைகுளத்தான், அவருடைய நண்பர்களான வசந்த், மணிகண்டன், கார்த்திக் பிரபாகரன், சக்திவேல், மலையரசன் ஆகிய 6 பேரும் சென்றனர். அப்போது அங்கு வந்த வளர்மதி மற்றும் உறவினர்களிடம் நிறைகுளத்தான் உள்ளிட்டவர்கள் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த வளர்மதி, அவருடைய உறவினர்களான பரமேஸ்வரி, சுந்தரி, வேல்முருகன், சக்தி ஆகிய 5 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், நிறைகுளத்தான் உள்பட 6 பேர் மீது ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்