ஈரோட்டில் காடா துணி வாங்கி ரூ.1½ கோடி மோசடி; வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
ஈரோட்டில் காடா துணி வாங்கி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் காடா துணி வாங்கி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக வடமாநிலத்தை சேர்ந்தவர் மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி உரிமையாளர்கள்
ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
நாங்கள் ஈரோடு மாநகர் பகுதியில் சொந்தமாக விசைத்தறி வைத்து நடத்தி வருகிறோம். நாங்கள் உற்பத்தி செய்யும் ரயான் காடா துணிகளை ஈரோட்டை சேர்ந்த தரகர் மூலம் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தோம்.
ரூ.1½ கோடி மோசடி
தற்போது அந்த வட மாநிலத்தை சேர்ந்தவர் எங்களுக்கு பணம் தராமல் தலைமறைவாகி விட்டார். தரகரிடம் இதைப்பற்றி கேட்ட போது அவரும் முறையாக பதில் கூறவில்லை. எங்களிடம் ரூ.1½ கோடி மதிப்பிலான காடா துணிகளை வாங்கிவிட்டு பணம் தராமல் மோசடி செய்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் அவரிடம் விற்பனை செய்த காடா துணிக்கான பணத்தை பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.