சலூன் கடையை சூறையாடிய 2 பேர் மீது வழக்கு
திருச்சியில் சலூன் கடையை சூறையாடிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி
திருச்சி செந்தண்ணீர்புரம் கோபாலன் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. (வயது 41). இவர், சங்கிலியாண்டபுரம் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள கடையை வாடகைக்கு விடுவது தொடர்பாக மற்றொரு தரப்பினர் சுப்பிரமணியிடம் தகராறு செய்து, சலூன் கடையை சூறையாடியதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், செந்தண்ணீர்புரம் திரு.வி.க. தெருவை சேர்ந்த கிளிண்டன்(28), சங்கிலியாண்டபுரம் டவுன் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்த தினேஷ்குமார் என்ற குண்டுமணி(27) ஆகிய 2 பேர் மீது பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தினேஷ்குமார் மீது பொன்மலை, பாலக்கரை, கண்டோன்மெண்ட் மற்றும் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையங்களில் 9 வழக்குகளும், கிளிண்டன் மீது பொன்மலை போலீசில் ஒரு வழக்கும் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.