நெல்லை: மருந்து கடை ஊழியர் தற்கொலை
மருந்து கடை ஊழியர் அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று இறந்தார்
நெல்லை:
பாளையங்கோட்டை கொடிகார ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் பீட்டர் ரமேஷ் (வயது 51). இவர் மருந்து கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த பீட்டர் ரமேஷ் சம்பவத்தன்று வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி பீட்டர் ரமேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.