ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்குபதிவு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

Update: 2022-03-24 21:08 GMT
பொன்மலைப்பட்டி
ஹிஜாபுக்கு தடை சரியே என தீர்ப்பளித்த கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பை கண்டித்தும், 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரியும் சுன்னத் ஜமாத் மற்றும் தமிழக தர்காக்கள் ஜமாத் சார்பில் அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி நோய் பரப்பும் விதமாக அதிக கூட்டம் கூடியதற்காக சுன்னத் ஜமாத் பேரியக்கத்தை சேர்ந்த பஷீர், முஸ்லிம் உரிமைகள் பாதுகாப்பு கழகத்தை சேர்ந்த இடிமுரசு இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ. ஹசான் பாஜி, தமிழக தர்காக்கள் ஜமாத்தை சேர்ந்த அமீர் பாதுஷா மற்றும் முபினா பேகம் உள்பட 60 பேர் மீது அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்