நெட்பால் போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணி வெற்றி
நெட்பால் போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
உடையார்பாளையம்:
தேசிய அளவிலான நெட்பால் போட்டி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 4 நாட்கள் நடைபெற்றது. இதில் 21 மாநிலங்களில் இருந்து 72 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை பாரதிதாசன் பல்கலைக்கழக அணியும், 2-வது பரிசை கோழிக்கோடு பல்கலைக்கழக அணியும், 3-வது பரிசை கேரளப் பல்கலைக்கழக அணியும், 4-வது பரிசை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக அணியும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் பரிசு வழங்கி பாராட்டினார்.