பள்ளியில் இருந்து 4 வயது சிறுமியை கடத்திய பெண் கைது

பள்ளியில் இருந்து 4 வயது சிறுமியை கடத்திய பெண் கைது

Update: 2022-03-24 20:35 GMT
மதுரை
மதுரை ஆனையூர் பகுதியில் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று மதியம் உணவு இடைவேளியின் போது பெண் ஒருவர் கையில் கலர் பாட்டிலுடன் அந்த பள்ளியின் கதவு முன்பு நின்று கொண்டிருந்தார். பின்னர் அந்த பெண், விளையாட்டு மைதானத்தில் நின்று கொண்டிருந்த 4 வயது சிறுமியை கலர் பாட்டிலை காண்பித்து அழைத்துள்ளார்.
அவர் அருகில் சென்றதும் சிறுமியை தூக்கி கொண்டு அங்கிருந்து அந்த பெண் தப்பி ஓடியுள்ளார். அதை பார்த்த ஆசிரியை ஒருவர், அந்த பெண்ணை விரட்டி சென்றபோது, அக்கம்பக்கத்தினர் அவரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அந்த பெண் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வாசுகி (வயது 39) என்பதும், அவர் குழந்தையை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அந்த பெண்ணை கூடல் புதூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாசுகியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்