ஆக்கிரமிப்புகளை அகற்றிய பொதுமக்கள்
ஆக்கிரமிப்புகளை பொதுமக்களே அகற்றினர்.;
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் பெரிய ஏரி உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் கரை கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதனை அகற்ற பொதுப்பணித்துறையினர் பல ஆண்டுகளாக முயன்று வந்தனர். தற்போது கோர்ட்டு உத்தரவின்படி செந்துறை- உடையார்பாளையம் சாலையில் உள்ள ஆலமரத்தில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) ஆக்கிரமிப்புகள் உறுதியாக அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் வாசிக்கும் மக்கள் தாங்களாகவே ஏரிக்கரை பகுதியில் அமைத்திருந்த கட்டிடங்கள் மற்றும் கொட்டைகளை இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.