வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது

வீடு புகுந்து நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-03-24 20:34 GMT
பேரையூர்
பேரையூர் அருகே உள்ள சலுப்பப்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 29 பவுன் நகை திருட்டு போனது. அதை தொடர்ந்து தொட்டணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5½ பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் பேரையூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரோஜா உத்தரவின்பேரில் பேரில் இன்ஸ்பெக்டர் காந்தி, தலைமையில் தனிப்படை போலீசார் நகைகளை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக கள்ளிக்குடி தாலுகா புளியங்குளத்தை சேர்ந்த ஆறுமுகம்(வயது 36), திருமங்கலம் தாலுகா மேலக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன்(57) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்