மீண்டும் மஞ்சப்பை-பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
அரியலூரில் மீண்டும் மஞ்சப்பை-பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அரியலூர்:
75-வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மீண்டும் மஞ்சப்பை-பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ரமணசரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள், பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரியலூர் ஒற்றுமை திடலில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கலெக்டர் மஞ்சப்பை வழங்கி, நமக்காக எங்கு சென்றாலும் 250 கிராம் எடையுள்ள செல்போனை சுமந்து செல்கிறோம். இந்த மண்ணுக்காக 30 கிராம் எடையுள்ள துணிப்பையை சுமந்து செல்லலாமே. எனவே அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் நெகிழிப் பையை தவிர்ப்போம், இயற்கை வளம் காப்போம், என்றார்.