மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-24 20:29 GMT
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் உள்ள பென்னகோணத்தை சேர்ந்த மாரிமுத்துவின் மகன் செல்வகுமார்(வயது 25). இவர் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த மாணவி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர், அந்த மாணவியை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது பற்றி டாக்டர்கள் கொடுத்த தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்