நெல்லையில் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் 2 பேர் சிறையில் அடைப்பு

நெல்லையில் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-03-24 20:28 GMT
நெல்லை:
நெல்லையில் கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரிசி பதுக்கல்
நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்தவர்கள் உடையார் (வயது 39), வலதிராஜ் (23). இவர்கள் ரேஷன் அரிசியை பதுக்கி கேரளாவுக்கு கடத்தி வந்தனர். இதனால் இவர்களை நெல்லை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும், மேலும் ரேஷன் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் சம்பவம் அதிகரிக்கும் என்பதால் இவர்களை கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருக்கு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
கைது
இதை மாநகர போலீஸ் கமிஷனர் துரைக்குமார் ஏற்று, உடையார், வலதிராஜ் ஆகியோரை கள்ளச்சந்தை தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 
இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினார்.

மேலும் செய்திகள்