ரூ.48 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வாழப்பாடி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ48 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடந்தது.;

Update: 2022-03-24 20:19 GMT
வாழப்பாடி:-
வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ேநற்று முன்தினம் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் 1,500 மூட்டை பருத்திைய விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 610 முதல் ரூ.12 ஆயிரத்து 122 வரையும், டி.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 499 முதல் ரூ.12 ஆயிரத்து 992 வரையும் விலை போனது. மொத்தம் 1,500 மூட்ைட பருத்தி ரூ.48 லட்சத்துக்கு ஏலம் போனது.

மேலும் செய்திகள்