மாரியம்மன் கோவிலில் கும்ப ஊர்வலம்
மாரியம்மன் கோவிலில் கும்பம் ஊர்வலம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சி அருகே ஈசநத்தத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி மாரியம்மன், காளியம்மன், முத்தாளம்மன், பகவதி அம்மன், கருப்பண்ணசாமிக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று மாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு கும்ப ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றனர். பின்னர் அந்த கும்பங்கள் ஈசநத்தம் பகுதியில் உள்ள கிணற்றில் விடப்பட்டன.