இரட்டை டிப்பர் டிராக்டர்களால் விபத்து அபாயம்

இரட்டை டிப்பர் டிராக்டர்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-03-24 19:39 GMT
கரூர் மாவட்டம் நொய்யல், கொடுமுடி, சிவகிரி, முத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் கரும்புகளை கொண்டு செல்கின்றனர். இதேபோல் டிராக்டரில் இரண்டு டிப்பர்களை இணைத்து கரும்பு பாரம் ஏற்றி வருகின்றனர். இதனால் டிராக்டருடன் 2 டிப்பர் செல்வது தெரியாமல் முந்தி செல்பவர்கள் டிப்பரில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் இரவு நேரங்களில் 2 டிப்பர்களில் கரும்பு பாரங்களை ஏற்றி செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இரண்டு டிப்பர்களில் கரும்பு மற்றும் பல்வேறு பாரங்களை ஏற்றிச்செல்லும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்