உலக தண்ணீர் தினம் உறுதிமொழி ஏற்பு
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உலக தண்ணீர் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கரூர்,
உலக தண்ணீர் தினத்தையொட்டி தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில் தண்ணீர் தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை பொதுமேலாளர் (சக்தி) சந்திரமௌலீஸ்வரன், முதுநிலை மேலாளர் (ஆய்வகம்) விஜயகுமார், முதுநிலை மேலாளர் பாலசுப்பிரமணியன், முதுநிலை மேலாளர் (சக்தி) ராஜு மற்றும் துணை மேலாளர் (மனிதவளம்) சங்கர் ஆகியோர் முன்னிலையில் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.