திறந்தவெளியில் உள்ள நெல்மூடைகளை வாணிப கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் -அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளதால் திறந்தவெளியில் உள்ள நெல்மூடைகளை வாணிப கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-03-24 19:15 GMT
காரியாபட்டி, 

மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளதால் திறந்தவெளியில் உள்ள நெல்மூடைகளை வாணிப கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டு உள்ளார்.

நெல் கொள்முதல்

தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இதற்காக கிராமப் பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நேரடி கொள்முதல் நிலையங்களில் போதிய இடவசதி இல்லாததால் நெல் மூடைகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே திறந்த வெளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கப்பட்டுள்ளது.இதனால், நெல் மூடைகளை பாதுகாக்கும் வகையில், அவற்றை விரைந்து வாணிப கிடங்குகளுக்கும், அரிசி ஆலைகளுக்கும் அனுப்புமாறு, மண்டல மேலாளர்களுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

லாரி மூலம் அனுப்பும் பணி

அதனைத் தொடர்ந்து முடுக்கன்குளம் பகுதிகளில் 31 ஆயிரம் நெல் மூடைகள் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூடைகள் திறந்த வெளியில் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் ஒரு சில நெல் மூடைகள் சேதமடைந்தது.
 இதனால் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின் பேரில் உடனடியாக மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் தலைமையில் நெல் மூடைகளை பாதுகாப்பான இடத்திற்கு லாரி மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. பெரும்பாலான நெல்மூடைகள் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்