வாணியம்பாடியில் 2-வது நாளாக காற்றுடன் மழை

வாணியம்பாடியில் 2-வது நாளாக காற்றுடன் மழை பெய்தது.

Update: 2022-03-24 19:04 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஜாப்ராபாத், அம்பலூர், உதயேந்திரம் ஆகிய பகுதிகளில கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்