புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது
புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 33). இவர் அதேப்பகுதியை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்தநிலையில் இளம்பெண்ணுடன் எடுத்த புகைப்படத்தை தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என சதாம் உசேன் மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஷேக் இஸ்மயில் (21), ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த முஹமத் ஜனான் (24) ஆகியோரும் அந்த இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து சதாம் உசேன், ஷேக் இஸ்மயில், முஹமத் ஜனான் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை தேடி வருகின்றனர்.