இருந்திராப்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
அன்னவாசல்:
இலுப்பூர் அருகே உள்ள இருந்திராப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியை ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாத்துரை தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மாணவர்கள் தங்கள் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அறிவியல் சார்ந்த மாதிரிகளை தயார் செய்து கண்காட்சியில் இடம் பெற செய்தனர். மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாதிரிகளை மாணவர்கள் பார்வையாளருக்கு விளக்கத்துடன் எடுத்துக் கூறினர். கண்காட்சியினை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், உள்ளூர் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டி சென்றனர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.