மோகனூர் அருகே வாய்க்கால் புறம்போக்கில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மோகனூர் அருகே வாய்க்கால் புறம்போக்கில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.;
மோகனூர்:
மோகனூர் அருகே உள்ள கொமாரபாளையம் கிராமத்தில் 75 சென்ட் வாய்க்கால் புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால் புறம்போக்கை மீட்க மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார். அதன்பேரில் மோகனூர் தாசில்தார் தங்கராஜ் தலைமையில், பரமத்திவேலூர் பாசனபிரிவு பணி ஆய்வாளர் துரைராஜ், துணை தாசில்தார் கணபதி, பாலப்பட்டி வருவாய் ஆய்வாளர் புவனேஷ்வரி மற்றும் கொமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் வாய்க்கால் புறம்போக்கு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, 75 சென்ட் நிலத்தை மீட்டனர்.