ராசிபுரத்தில் தூக்குபோட்டு நெசவுத்தொழிலாளி சாவு

ராசிபுரத்தில் தூக்குபோட்டு நெசவுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-03-24 18:49 GMT
ராசிபுரம்:
ராசிபுரம் வி.நகரை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 45). நெசவுத்தொழிலாளி. இவருடைய மனைவி பிரபா. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரபா, சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் கடந்த 2½ ஆண்டுகளாக வசித்து வருகிறார். அவரை பத்மநாபன் பலமுறை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் பிரபா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பத்மநாபன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட பத்மநாபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்