20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
20 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவு அலுவலர் சீனிவாசன் தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட 20 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடைக்காரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். மேலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.