ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

கலவை அருகே ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Update: 2022-03-24 18:47 GMT
கலவை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஏரியில் ஆக்கிரமிப்புகள், கால்வாய், நீர் பிடிப்பு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று கலவை தாலுகாவில் மாம்பாக்கம் வட்டத்தில் ஆரூர் ஏரியில் தனிநபர் ஒருவர் ஒரு ஏக்கர் ஆக்கிரமிப்பு செய்து நெற் பயிர் சாகுபடி செய்திருந்ததை அகற்ற பல முறை எச்சரிக்கை செய்தும் அகற்றாததால் கலவை தாசில்தார் ஷமீம், நீர்வளத் துறை அதிகாரிகளுடன் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர். 

மண்டல துணை தாசில்தார் சத்யா, வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், கிராம அதிகாரி நவீன், ஊராட்சி செயலாளர், கிராம உதவியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்