பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
ஆற்காட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்துவதாக வந்த தகவலின்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் சந்தியா, வருவாய் ஆய்வாளர் மாதவன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள ஒரு குடோனில் கடத்தலுக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு 18 மூட்டைகளில் சுமார் 850 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை ஆற்காடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.