புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புதுக்கோட்டை கல்வி மாவட்ட பள்ளி ஆலோசகர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி தலைமை தாங்கி செஞ்சிலுவை கொடியேற்றி வைத்தும் ரெட்கிராஸ் நிறுவனர் ஜீன்ஹென்றி டூனாண்ட் படத்தை திறந்து வைத்து பேசினார். ஜே.ஆர்.சி மாவட்ட பொருளாளர் பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சரவணன், வக்கீல் ஜவஹர், குரு.மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். முடிவில் ஜே.ஆர்.சி. மாவட்ட இணை அமைப்பாளர் சாந்தி நன்றி கூறினார்.