வாழமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;
கீரனூர்:
குன்றாண்டார்கோவில் ஒன்றியம் வாழமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பாண்டிச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நலதேவன், வெங்கடேச பிரபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேங்கட லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு செய்யப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.