திருப்புவனம்,
பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது மடப்புரம் விலக்கு பகுதி எம்.ஜி.ஆர். நகரில் வசிப்பவர் சசிகுமார் மனைவி முனீஸ்வரி (வயது38). இவர் மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.