உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி
விருதுநகரில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகரில் உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விருதுநகர் தேசபந்து திடலில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின் தேசபந்து திடலுக்கு வந்து முடிவுற்றது. பேரணியை மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தியபடியே சென்றனர்.