இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாயார் புகார் தெரிவித்து உள்ளார்.
விருதுநகர்,
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாயார் புகார் தெரிவித்து உள்ளார்.
பெண் தற்கொலை
விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த ஜெயசீலி என்பவரது மகள் லிபிபியர்ஸ் (வயது 25) என்பவருக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அந்தோணிராஜ் கடன் அதிகமாக வாங்கி இருந்த நிலையில் அடிக்கடி தனது மனைவியிடம் அவரது தாயாரிடம் பணம் கேட்கும்படி அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று லிபிபியர்ஸ் தாயார் ஜெயசீலியை தொடர்பு கொண்டு கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் சிறிது நேரத்தில் அந்தோணிராஜ் ஜெயசீலியை தொடர்பு கொண்டு அவரது மகள் லிபிபியர்ஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
சாவில் சந்தேகம்
இதனைத் தொடர்ந்து ஜெயசீலி விருதுநகர் பஜார் போலீசில் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் தனது மருமகன் அந்தோணி ராஜ் மீது சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.இதுபற்றி பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.