துணிக்கடை அதிபரிடம் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் மோசடி

துணிக்கடை அதிபரிடம் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் மோசடி பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-24 18:29 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை செந்தில் நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது32). இவர் அங்கு துணி கடை வைத்துள்ளார். கடந்த 9-ந் தேதி அன்று இவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசிய ஒருவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று கூறினாராம். 
இதை நம்பிய கணேஷ் குமார் அவர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் அவர் கணேஷ் குமாரின் தொடர்பை துண்டித்து விட்டாராம். இதுகுறித்து கணேஷ் குமார் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில் குமாரிடம் புகார் செய்தார்.அவரது உத்தரவின்பேரில் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்