வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-03-24 18:23 GMT
வேலூர்

வேலூர் நகரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். 
அதன்பேரில் வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், கந்தவேல், கிளமண்ட் தேவபாலன் ஆகியோர் நேற்று கொணவட்டம் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீ, மளிகைக்கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், சுகாதாரம் இன்றி இயங்கிய 3 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அதிகளவு நிறமூட்டி (கலர்) பயன்படுத்தப்பட்ட 5 கிலோ பொறித்த சிக்கன், 25 பழைய பரோட்டோ, காலாவதியான 20 லிட்டர் குளிர்பானங்கள், ஓட்டலில் திரும்ப திரும்ப பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

குட்கா விற்ற 2 மளிகை கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய ஓட்டலுக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டன. 
இந்த திடீர் ஆய்வு தொடர்ந்து நடைபெறும். பொதுமக்கள் உணவின் தரம் தொடர்பாக 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்