இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்னிலம்:
தேசிய கல்வி கொள்கையின் ஒரு அம்சமாக நுழைவு தேர்வை மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை பாதியாக குறைத்து வழங்குவதை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த் உள்ளிட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.