வேன் கவிழ்ந்து டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம்

சாத்தூர் அருகே நான்கு வழி சாலையில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-24 18:18 GMT
சாத்தூர்,

தென்காசி மாவட்டம் வீராணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 23). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு காதணி விழாவுக்காக இருக்கன்குடிக்கு செல்வதற்காக வேனில் சதீஷ்குமார், உறவினர்கள் 13 பேருடன் புறப்பட்டார்.
வேனை அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை(29) என்பவர் ஓட்டினார். அப்போது கோவில்பட்டி-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் தமிழ்நாடு ஓட்டல் அருகே வேன் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த சதீஷ்குமார், வெங்கடேஷ், மதன், பாலசுந்தரம், முருகன், செல்வகுமார், டிரைவர் சின்னத்துரை ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
இச்சம்பவம் குறித்து சதீஷ்குமார், சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்