பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு

பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-03-24 18:00 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டிணம் வடக்குத் தெருவை சேர்ந்த கஜேந்திரன் மனைவி செல்வி (வயது35). இவர் திருப்பாலைக்குடியில் உள்ள உறவினர் இல்ல விசேஷத்தில் கலந்துகொண்டு விட்டு பின்னர் தனது 12 பவுன் நகைகளை ஒரு பர்சில் பத்திரமாக வைத்து தான் கொண்டு வந்த கட்டைப்பையில் வைத்துள்ளார்.பின்னர்  ராமநாதபுரம்  சந்தைக்கு காய்கறி வாங்க வந்துள்ளார். சந்தையில் கடலை வாங்கி விட்டு பணம் எடுக்க பர்சை பார்த்தபோது நகைகளுடன் இருந்த பர்ஸ் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்